أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹 🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ 🌹
♣ நவம்பர் – 2022 – 11 – ந் தேதி ஹிஜ்ரி – 1444 – [ ربيع الآخر] ரபி[ع]உல் ஆகிர் மாதம் – 15 – ம் தேதி மூன்றாம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 205 [டிஜிடல் முறை - 48] ♣
بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {﴿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ (41) ۞)} -[سورة النازعات 79 الآية 40] - صدق الله العظيم / قال رسول الله ﷺ « عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ. رواه الترمذي. ".متفق عليه. ". » [إلخ], الى آخره, (. سنن ابن ماجه. 4260) أو كما عبر الرسول صلى الله عليه وسلم
[தலைப்பின் விளக்கம் : ‘ [நஃப்ஸை] ஆன்மாவை அழகுபடுத்திடுவோமா? !!! ” அதாவது 'நப்ஸ்' என்று அழைக்கப்படும் மனோ இச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு இணக்கமாக நடக்க வேண்டும். அப்படி வாழ்ந்தால் ஈருலகிலும் கிடைக்கும் நலவுகள். என்னென்ன என்பதனைப்பற்றியும், அப்படி வாழாவிட்டால் ? ஈருலகிலும் கிடைக்கும் தீமைகள் என்னென்ன என்பதனைப்பற்றியும் விளக்கும் ஜுமுஆ குறிப்புரை]
【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION ♣】
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ ربيع الآخر ] ரபி[ع]உல் ஆகிர் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து இறுதி வரை வந்த அத்தனை நபிமார்களையும் முதலாவதாக மக்களின் உள்ளங்களை சுத்தப்படுத்துங்கள், அவர்களின் உள்ளங்களை நீங்கள் தூய்மைபடுத்துங்கள் என்ற பெரும் பொறுப்பை கொடுத்துதான் அனுப்பியிருக்கிறான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னிடத்தில் வருகிறார்கள். முதல் சந்திப்பு, அந்த முதல் சந்திப்பில் ஃபிர்அவ்னை பார்த்து கேட்பதை அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்.
فَقُلْ هَلْ لَكَ إِلَى أَنْ تَزَكَّى (18) وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشَى இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). (அல்குர்ஆன் 79:18,19) قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ நப்ஸை தூய்மைபடுத்தியவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். (அல்குர்ஆன் 87:14) ஆக நம்முடைய முதலாவதாக பொருப்பு [நப்ஸை] உள்ளங்களை சுத்தப்படுத்துவதுதான்.
ஒரு செயலை எந்த எண்ணத்துடன் எந்த வழிமுறையை பின்பற்றி செய்ய வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அதன்படி நடக்கும்போதுதான் அது அவனிடம் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும். தன் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனமானதாகும். [example : ஒரு ஊருக்கு எப்படி போக வேண்டுமோ? அவ்வாறு போக வேண்டும் தன் மனம் போன போக்கில் போகி விட்டு எனக்கு எந்த ஊர் கிடைக்கவில்லையே என்பது போல]
- ஆக "நப்ஸின்' மனோ இச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, வாழ்ந்தால் ஈருலகிலும் கிடைக்கும் நலவுகள். "நப்ஸின்' மனோ இச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, வாழாவிட்டால் ? ஈருலகிலும் கிடைக்கும் தீமைகள் என்னென்ன என்பதனைப்பற்றி இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்….
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣
【மன இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான். 】
【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, [79:40] நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். [திருக்குர்ஆன் 79:41.]
﴿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ﴾ خاف سؤال يوم الحساب ﴿وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى﴾ والهوى هو كل ما تميل إليه النفس مما فيه مخالفة للشرع. ﴿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى* فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ﴾.
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
【தன் மன இச்சைப்படி வாழாதே! 】
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ. رواه الترمذي
“எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி - எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ . (இப்னுமாஜா سنن ابن ماجه. 4260)
وَقَالَ تَعَالى: (يآيُّهَا الَّذِيْنَ امَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلّهِ وَلَوْ عَلَى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَاْلاَقْرَبِيْنَ اِنْ يَكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّهُ اَوْلى بِهِمَا قف فَلاَ تَتَّبِعُوا الْهَوَى اَنْ تَعْدِلُوْا وَاِنْ تَلْوُوْا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا۞). (النساء:١٣٥)
நம்பிக்கையாளர்களே, நீதியில் நீங்கள் நிலைத்திருப்பவர்களாக - அல்லாஹ்விற்காக (உண்மையைக் கொண்டு) சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி, உங்களுக்கோ, அல்லது (உங்களின்) பெற்றோருக்கோ இன்னும் (உங்களின்) உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரி (நீங்கள் எவருக்கு எதிராக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராக இருந்தாலும் அல்லது வறியவராக இருந்தாலும் (சரியே), ஏனேனில் அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில் உங்களைவிட) மிக மேலானவன்; எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சையை நீங்கள் பின்பற்றாதீர்கள்; மேலும் நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினாலும், அல்லது (சாட்சியம் கூறாது) நீங்கள் புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் செய்கின்றவற்றை அறிந்தவனாக இருக்கிறான். (அந்நிஸா:135)
【 நப்ஸின் கெடுதியைவை விட்டும் நபிகளார் பாதுகாப்பு வேண்டியுள்ளார்கள். . 】
✍🏻 அன்புள்ளவர்களே! நபியவர்கள் நப்ஸின் கெடுதியைவை விட்டும் ஓவ்வொரு நேரமும் பாதுகாப்பு வேண்டியுள்ளார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَقُولُ: اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا. رواه مسلم
ஹஜ்ரத் ஸைதுப்னு அர்க்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், (اَللّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا) யாஅல்லாஹ்! பலன் தராத கல்வியை விட்டும், அச்சமற்ற உள்ளத்தைவிட்டும், மனநிறைவு கொள்ளாத ஆத்மா (நப்ஸ்) வை விட்டும், ஏற்றுக் கொள்ளப்படாத துஆவைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன்'' என்று துஆச் செய்து கொண்டு இருப்பார்கள். (முஸ்லிம்)
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதும் இதை சொல்லி பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். அந்தளவு நஃப்ஸின் தீங்கிலிருந்து பயந்து பாதுகாப்பு தேடினார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . أَمَّا بَعْدُ "
யா அல்லாஹ்! எங்களுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள். எங்களது செயல்களால் ஏற்படும் தீமையிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள் [முஸ்னத் அஹ்மத், 1883]
عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي. رواه احمد
உங்கள் வயிறுகள், மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத், )
عَنْ اَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: وَاَمَّا الْمُهْلِكَاتُ: فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًي مُتَّبَعٌ، وَاِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. ورواه البزار
வழிபடக்கூடிய கருமித்தனம், பின்பற்றப்படக்கூடிய மனஇச்சை, தன்னைத்தானே சிறந்தவனாகக் கருதுதல் ஆகிய மூன்று காரியங்களும் மனிதனை நாசமாக்கக் கூடியவை'' (பஸ்ஸார், பைஹகீ, தர்ஙீப்)
【[நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்துவதின் அவசியம்.】
✍🏻 அன்புள்ளவர்களே! நப்ஸ்' என்று அழைக்கப்படும் மனோ இச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு இணக்கமாக வாழ வேண்டும். அப்படி வாழாமல், மனதை அதன் போக்கில் செயல்படவிட்டால், அது பாவச்செயல்களை ருசிக்கப்பழகி அதன் இன்பத்தில் மூழ்கிவிடும். பிறகு பாவம் செய்வது அதற்கு சர்வ சாதாரணமாகிவிடும்.
சுவையான உணவு, பணம், புகழ், கேளிக்கை மற்றும் வீண் விளையாட்டு, அடுத்தவரின் உடைமைகளை அபகரித்து அனுபவிப்பது, மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது, காண்பதை எல்லாம் அடைய துடிப்பது போன்றவற்றில் சிலரது மனம் விருப்பம் கொள்கிறது. அதனை நிறைவேற்றிட முயற்சிக்கும்போது, அது அல்லாஹ்வுக்கு மாறாக நடக்க வைத்து விடுகின்றது.
உலக ஆசையின் வேட்கையால் தயக்கமின்றி பாவங்கள் செய்யப்படுவதால்தான் துன்ப துயரங்களை மனிதன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். 'மனம்' என்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் எப்போது கட்டுப்படாமல் போகின்றதோ, அப்போது பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுச்சொத்துக்கள் கையாடல் செய்யப்பட்டு சூறையாடப்படுகிறது. பெரியோர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வேத வசனங்களில் குறை காணப்படுகின்றது. விபசாரமும், மது அருந்துவதும் அதிகமாகி விடுகின்றது. இப்படி பாவங்களை எல்லாம் பயமின்றி செய்து விட்டு, உண்மைகளை எல்லாம் இருட்டறையில் பூட்டி வைக்க முயற்சிப்பது தவறல்லவா?
உலகில் துணிந்து பாவம் செய்கின்றோம், அதனைக் கண்டு பயப்படுவதுமில்லை. இறைவன் தண்டிப்பானே என்று அஞ்சுவதுமில்லை, தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு தேடுவதுமில்லை. இறைவனின் ஒரு கட்டளையை நிறைவேற்றிட அவனது பல கட்டளைகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றோம். மறுமையில் விசாரணை இலகுவாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சுய விசாரணை செய்து, நடுநிலையோடு நமது தவறை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறைவனின் விசாரணை மிகக் கடுமையாக இருக்கும். அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த சன்மார்க்க நெறியில் தான் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். பொது அமைதிக்கும், நலனுக்கும் கேடு விளைவிக்கும் செயல்கள் யாவையும் கைவிடுவதுதான் சிறந்ததாகும்.
சுனாமியின் சீற்றம், மழை வெள்ளத்தின் கோர தாண்டவம், நிலநடுக்கம், புயல், காட்டுத்தீ, நிலச்சரிவு... போன்ற மறுமை நாளின் அடையாளங்கள் நம் கண்முன்னால் நடைபெறுகின்றன. ஆனால் அதிலிருந்து நாம் பாடம் படித்து திருந்தியதாக தெரியவில்லை. இறைவனின் கருணை எப்படி விசாலமானதோ, அதுபோல அவனது தண்டனையும் மிகக்கடுமையானது என்பதை உணர்ந்தால்தான் மனம் திருந்த முடியும். தேவையற்ற இச்சைகளில் இருந்து விலகி இருப்பவர் களுக்கு 'சொர்க்கம்' தான் கூலி என்பதை அருள்மறை திருக்குர்ஆன் (79:40-41) இவ்வாறு கூறுகிறது: 'எவர் தம்முடைய ரப்பின் (இறைவனின்) சந்நிதானத்தை பயந்து, மனோ இச்சையை விட்டும் தன் ஆன்மாவை தடுத்துக்கொண்டாரோ, (அவருக்கு) நிச்சயமாக 'சொர்க்கம்' அது தான் (அவருடைய) தங்குமிடமாகும்'. எனவே, மனோ இச்சையின்படி நடக்காமல் இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்பட்டு, நிறைவான வாழ்வை நாம் அனைவரும் பெற இறைவன் அருள்புரிவானாக, ஆமீன்.
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ. رواه الترمذي
“தனது உள்ளத்துடன் போராடுபவரே முஜாஹித், (மன இச்சைக்கு மாற்றமாக நடக்க முயற்சிப்பவர்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஃபளாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ 1621)
【நஃப்ஸை] ஆன்மாவை அழகுபடுத்தும் முன் நம் எதிரிகள் யாரென அறிவோமா?? 】
✍🏻 அன்புள்ளவர்களே! மனித வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சனைகள் இழப்புகள் இவற்றுக்கான அடிப்படை காரணம் என்னவெனில் மனிதன் தன்னுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை அறியாமல் வாழ்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் நமது உண்மையான எதிரிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் நாம் நடக்கின்ற போது சரிகிவிடாமல் இறைவனின் தொடர்பில் நிலைக்க வேண்டுமானால் நிச்சயமாக நமது எதிரியை வென்றாக வேண்டும்.
✍🏻 அன்புள்ளவர்களே! நமது எதிரிகள் யாரென்று தெரிந்து அவைகளை வெல்வோமா ?
திருமறையும் திரு நபி (ஸல்) அவர்களும் மனிதனுடைய மிகப்பெரிய எதிரிகளாக இரண்டு பேரை அடையாளம் காட்டுகின்றார்கள்.
1) ஒருவன் – ஷைத்தான்.
2) இரண்டு - மனிதனை தீமையின் பக்கம் கொண்டு செல்லும் அவனுடைய நப்ஸ்.
قَالَ اللهُ تَعَالي: ( اِنَّ الشَّيْطنَ كَانَ لِلْإِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا۞). (بني اسرائيل:٥٣)
நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாவான்''. (பனீஇஸ்ராயீல்:53)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். [திருக்குர்ஆன் 2:208. 2:168.]
தாஹா நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:-
أَعْدَى عَدُوِّكَ نفسُكَ التى بين جَنْبَيْكَ
உன்னுடைய இரண்டு விலா பகுதிகளுக்கும் இடையில் இருக்கின்ற உன்னுடைய நப்ஸ் தான் உனது மிகப் பெரிய விரோதியாகும். [ இஹ்யாஉலூமுத்தீன் ]
[மிகப்பெரிய பலசாலி யார் ? ]
حدثنا علي بن عبد الحميد الغضائري قال : سمعت السري يقول : « أقوى القوة غلبتك نفسك ومن عجز عن أدب نفسه كان عن أدب غيره أعجز »
ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் சொல்ல 'தான் கேட்டதாக அலி பின் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் உனது நப்ஸை நீ ஜெயிப்பது தான் மிகப் பெரிய வலிமையாகும் 'யார் தனது நப்ஸை நல் வழிபடுத்துவதை விட்டும் இயலாமையில் ஆகிவிட்டானோ அவன் பிறமனிதர்களை நல் வழிப்படுத்த ஒருபோதும் சக்திபெறமாட்டான்' என்றார்கள் (நூல் : அஸ்சுஹ்து லில்பைஹகீ)
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ الشَّدِيْدُ بِالصُّرَعَةِ، اِنَّمَا الشَّدِيْدُ الَّذِيْ يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ. رواه البخاري
(தன் எதிரியை) வீழ்த்துபவர் பலசாலி அல்ல. மாறாக கோபம் [ஆசை] வந்த சமயம் தன்னைக் [நஃப்ஸை] கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலி'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 6114)
【சீர்க்கெட்ட உள்ளத்தை செம்மைப்படுத்த நாம் செய்ய வேண்டியவை எவை ?. 】
أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ. أَلاَ وَهِيَ الْقَلْبُ "".
அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம். நப்ஸ்' (புகாரி 52)
✍🏻 அன்புள்ளவர்களே! சீர்க்கெட்ட உள்ளத்தை செம்மைப்படுத்த நினைக்கின்ற நாம் [ நஃப்ஸை ] உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் இந்த விஷயத்தில் கவனமும், தொடர் முயற்சியும், மேற்கொண்டால் நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதியும் சீராகவும் சிறப்பாகவும் அமையும். [உதாரணமாக : தொடர் மருத்துவத்தை போல அதாவது தொடர்ந்து ஒரே மருத்துவத்தை மேற்கொண்டால் நோய் சீக்கிரம் குணமாகும். 10 நாளுக்கு இந்த மாத்திரை 10 நாளைக்கு அந்த மாத்திரை என எடுத்துக்கொண்டால் நோய் சீராகாது, சிரமத்தை தந்துவிடும். அது போல]
உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் இந்த துறையில் சொல்லப்பட வேண்டிய செய்திகள் கடல் போன்று விசாலமானது என்றாலும் இங்கு முக்கிய 3 வழி முறைகள் சொல்லப்படுகிறது.
1) தினமும் நமது நப்ஸோடு நாம் பேசுவதற்கும் அன்று நாம் செய்த நன்மை தீமைகளை நமக்கு நாமே கணக்கு கேட்டு கொள்வதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்குவது.
2] நஃப்ஸை சீராக்க அவசியப்படும் இரண்டாவது விஷயம் நப்ஸை பழி வாங்குவது.
3] நஃப்ஸை சீராக்க தேவையான 3 வது விஷயம் நபித் தோழர்களின் வரலாறை படிப்பது.
சரி வாருங்கள் அதனைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்:- .
[முதலாவது 1) தினமும் நமது நப்ஸோடு நாம் பேசுவதற்கும் அன்று நாம் செய்த நன்மை, தீமைகளை - இஹ்திஸாப் [احتساب] நமக்கு நாமே கணக்கு கேட்டு கொள்வதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்குவது. அருள் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
أن النبي قال : ' من حاسب نفسه في الدنيا هون الله عليه الحساب في الآخرة
யார் இந்த உலகில் தனக்கு தானே கேள்வி கேட்டு தன்னை சரியாக்கி கொண்டானோ அவனுக்கு அல்லாஹ் மறுமையின் விசாரனையை இலகுவாக்கி வைப்பான் [நூல்: தப்சீர் சம்ஹானி]
【 நப்ஸுடன் பேசிய நல்லவர்கள் [நாதாக்கள்] 】
✍🏻 அன்புள்ளவர்களே! ' தினதினமும் யார் ? யாரிடமோ ? என்னன்னமோ? பேசுகிறோம். ஆனால் என்றைக்காவது ஒரு தடவையாவது நாம் நம் நஃப்ஸிடம் பேசியுள்ளேமா ? சிந்தித்து சீர்தூக்கி பாருங்கள். நப்ஸுடன் பேசிய நல்லவர்களை.
இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : ஒரு முஃமின் தன்னை தானே அவன் கண்கானித்து கொண்டிருப்பான், தன்னை விசாரித்துக் கொண்டிருப்பான். தன் மீது அவன் நிர்வாகம் செலுத்துவான். அல்லாஹ்விற்காக அந்த நஃப்ஸை அவன் கண்டித்துக் கொண்டே இருப்பான்.
இன்று நம்முடைய பிரச்சனை என்ன? நாம் பிறரை கண்டிப்போம். மனைவியை கண்டிப்போம், பிள்ளைகளை கண்டிப்போம், சகோதரர்களை கண்டிப்போம், நண்பர்களை கண்டிப்போம், பணியாட்களை கண்டிப்போம்.
இப்படி நமது கண்டிப்பெல்லாம் பிறருடைய நஃப்ஸின் மீது இருக்கும். ஆனால், நாம் நம்மை கண்டிக்கிறோமா? நமது செயல்களை நாம் கண்காணிக்கிறோமா? பிறர் செயல்களை கண்காணிக்கின்ற அளவிற்கு நமது செயல்களை நாம் கண்காணிக்கிறோமா? நாம் நமது செயல்களை கண்காணிக்க வேண்டும்.
وقد حكي عن كهمس «1» أنه كان يصلي كل يوم وليلة ألف ركعة ، وكان يسلم بين كل ركعتين ، ثم يقول لنفسه : قومي يا مأوى كل شر ما رضيت عنك
கஹ்மஸ் (ரஹ்) அவர்கள் தினமும் ஆயிரம் ரக்அத்துக்கள் நபில்தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கு பிறகும் தனதுநப்ஸை பார்த்து சொல்வார்கள் தீமையின் ஒதுங்கும் இடமாக இருக்கின்ற நப்ஸே மீண்டும் நின்று வணங்கு! உன்னை நான்பொருந்திக்கொள்ளவில்லை என்று சொல்வார்கள் . (நூல்; தப்சீர்தஸ்துரீ)
وكان يزيد الرقاشي يقول لنفسه ويحك يا يزيد من ذا الذي يصلي عنك بعد الموت من ذا الذي يصوم عنك بعد الموت من ذا الذي يرضي عنك ربك بعد الموت
அல்லாமா யஸீதுர்ரக்காஷி (ரஹ்) அவர்கள் அதிகமாகஇவ்வாறு தன் நப்ஸைபார்த்து சொல்வார்கள் யஸீதே உன்மரணத்திற்கு பின் உனக்காக யார் தொழப்போகிறார் உனக்காகயார் நோன்பு நோற்க்கப் போகிறார் உன் மரணத்திற்குப் பின் உனக்காக யார் இறைவனை திருப்திபடுத்த போகிறார். இவற்றையெல்லாம் வாழும் போதே உனக்கு நீ செய்து கொள்ள வேண்டும்.
وعن عمر رضى الله عنه انه كان يضرب قدميه بالدره إذا جنه الليل ويقول لنفسه ماذا عملت اليوم
உமர் (ரலி ) அவர்கள் இரவின் இருள் வந்து விட்டால் தனது சாட்டையால் தன் பாதத்தில் அடித்து கொள்வார்கள். அப்போது தனது நப்ஸை பார்த்து கேட்பார்கள் இன்று நீ என்ன காரியம் செய்தாய் என்று கேட்பார்கள்.
وروى عن عائشة رضى الله تعالى عنها أن أبا بكر رضوان الله عليه قال لها عند الموت ما أحد من الناس أحب إلي من عمر ثم قال لها كيف قلت فأعادت عليه ما قال فقال لا أحد أعز على من عمر
அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது மரண நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள் மக்களில் எனக்கு உமரை விடவும் பிரியமானவரும் கண்ணியமானவரும் இல்லை அதற்கு காரணம் இது தான். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் பேசிய பிறகு தனது நப்ஸை பார்த்து கேட்ப்பார்கள் நீ என்ன பேசினாய் எப்படி பேசினாய் என்று இவ்வாறு கேட்டு வார்த்தையை சரியாக்கி கொள்வார்கள் இது தான் காரணம் என்றார்கள். [நூல் : இஹ்யா உலூமுத்தீன் ]
[இரண்டாவது 2) நப்ஸை சீராக்க அவசியப்படும் இரண்டாவது விஷயம் நப்ஸை பழிவாங்குவது ஆகும்.
நமது மனது ஒரு தீமையை செய்து விட்டாலோ, அல்லது ஒரு நன்மையை விட்டு விட்டாலோ, அதை பழி வாங்குவதற்காக பல நன்மையான காரியங்களில் அதை ஈடுபடுத்த வேண்டும்.
ويحكى عن تميم الداري أنه نام ليلة لم يقم فيها يتهجد فقام سنة لم ينم فيها عقوبة للذي صنع
தமீமுத் தாரி (ரலி) அவர்கள் ஒரு நாள் தஹஜ்ஜத் தொழாமல் உறங்கி விட்டார்கள் அதற்காக தனது நப்ஸை தண்டிக்கும் நோக்கத்தில் ஒரு வருட முழுவதும் இரவில் நின்று வணங்கினார்கள். (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)
فقد عاقب عمر بن الخطاب نفسه حين فاتته صلاة العصر في جماعة بأن تصدق بأرض كانت له قيمتها مائتا ألف درهم
உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு முறை அஸர் ஜமாஅத் தப்பி போனது எனவே அதற்காக தனது நப்ஸை தண்டித்தார்கள் தண்டனையாக தன்னுடைய ஒரு இடத்தை விற்றார்கள் அதனுடைய மதிப்பு இரண்டு லட்சம் திர்ஹமாகும். (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)
இமாம் முஹம்மது இப்னு முன்கதிர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
محمد بن المنكدر يقول: "كابدت نفسي أربعين سنة حتى استقامت على طاعة الله"
எனது நஃப்ஸை தர்பியத்து செய்வதற்காக நாற்பது ஆண்டுகள் எனது நஃப்ஸோடு நான் போராடினேன். அப்பொழுதுதான் அது ஓரளவுக்கு சரியானது .
நாற்பது ஆண்டுகள் எனது நஃப்ஸோடு போராடினேன். அதனுடைய விருப்பங்களை அடக்குவதில், அதனுடைய இச்சையை அடக்குவதில் தவறான கெட்ட குணங்களிலிருந்து அதை பரிசுத்தப்படுத்துவதில், இப்பொழுது தான் அது ஓரளவிற்கு வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மற்றும் ஒரு அறிஞர் கூறுகிறார்கள் : இந்த நஃப்ஸிற்கு நான் எப்படி தர்பியத்து செய்தேன் என்றால், இந்த நஃப்ஸை வழுக்கட்டாயப்படுத்தி, இந்த நஃப்ஸை பலவந்தப்படுத்தி அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தேன். இபாதத்தில், வணக்க வழிபாட்டில் நான் அதை ஈடுபடுத்தும் பொழுதெல்லாம் அந்த நஃப்ஸ் ஆரம்பத்தில் விரும்பாமல் இருந்தது.
அழுது கொண்டு ஈடுபட்டது. அல்ஹம்துலில்லாஹ், ஒரு நேரம் வந்தது, வணக்க வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அந்த நஃப்ஸ் சிரித்த முகத்தோடு, மகிழ்ச்சியோடு ஈடுபட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வருவதென்றால், குர்ஆன் ஓதுவதென்றால், தர்மம் கொடுப்பதென்றால், உறவுகளை சேர்ப்பதென்றால், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதென்றால் நஃப்ஸிற்கு பிடிக்காது.
நஃப்ஸிற்கு அது சுமையாக தெரியும், தூரமாக பார்க்கும். இதெல்லாம் என்ன வேலை? இதெல்லாம் உனக்கு தேவையா? என்று கூறும். பொது சேவைகளில் ஈடுபடும் பொழுது, நன்மையான காரியங்களில் ஈடுபடும் பொழுது, இரவு வணக்கத்தில் ஈடுபடும் பொழுது, குர்ஆனை ஓதும் பொழுது அப்பொழுது தான் உடல் வலி வரும், அப்பொழுது தான் தூக்கம் வரும், அப்பொழுது தான் வேலைகளெல்லாம் நினைவுக்கு வரும்.
இப்படி நான் போராடி போராடி, நஃப்ஸை வழுக்கட்டாயப்படுத்தி, உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் சரி, நான் இதில் ஈடுபடுவேன் என்று ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நேரம் வரும்.
இந்த இபாதத்தை விட, அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தில் ஈடுபடுவதை விட, இந்த நஃப்ஸிற்கு பிடித்தமான ஒன்று துன்யாவில் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைய வேண்டும் சகோதரர்களே!
இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
المؤمن العاقل لا يترك لجامها ، ولا يهمل مقودها ، بل يُرخي لها في وقت والطول بيده
ஒரு முஃமின் தனது நஃப்ஸை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் என்றால் குதிரை ஓட்டக் கூடியவன் அந்த குதிரையின் கடிவாளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை போன்று.
நேரான பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கும் பொழுது கடிவாளத்தை சற்று இடைவெளி விட்டு நெருக்காமல் வைத்திருப்பான். அது எங்கு நேரான பாதையிலிருந்து சற்று விலகுகிறது என்று தெரிய வருகிறதோ இலேசாக இழுப்பான். அப்படி இலேசாக இழுக்கும் பொழுதே திரும்பி விட்டால் அப்படியே அதை விட்டு விடுவான்.
இல்லை, மீண்டும் மீண்டும் அது ஒரு தவறான பாதையில் அல்லது கோணலான பாதையில் அல்லது பாதையின் ஓரத்திற்கு செல்கிறது என்றால், அதை வழுக்காட்டாயப்படுத்தி அதை இறுக்கி அழுத்தமாக இழுப்பான்.
அப்படிதான் நஃப்ஸோடு நாமும் நடந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் இதை திளைத்திருக்கச் செய்ய வேண்டும்.
[மூன்றாவது 3) நப்ஸை சீராக்க தேவையான 3 -வது விஷயம்:-
நபித் தோழர்களின் வரலாறை படிப்பதின் மூலம் இஸ்லாத்திற்காக போர்களத்திலும் மற்ற நிலைகளிலும் அவர்கள் புரிந்த ஈடு இணையற்ற தியாகத்தை அறிந்து நம்முடைய நப்சிடம் எடுத்து சொல்லி இவ்வாறு கேட்க வேண்டும். மறுமையில் அந்த சஹாபாக்கள் இறைவா! நான் உனக்கு உயிரை கொடுத்தேன் போரில் உறுப்புகளை இழந்தேன் என் கணவரை நான் போரில் இழந்து விதவை ஆனேன் உனக்காக என் பிள்ளைகள் அநாதை ஆனார்கள் என்று சொல்லி பெருமைபடுகின்ற போது உன்னிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே. தண்டனையையும். இழிவையும் பெற்றுத்தரும் பாவங்கள் தானே இருக்கின்றது என்று நப்ஸிடம் சொல்லவேண்டும்.
கண்ணை தியாகம் செய்த கண்ணிய மிக்க சஹாபி:
وأخرج ابن عساكر عن سعيد بن عبيد الثقفي رضي الله عنه قال: رأيت أبا سفيان بن حرب رضي الله عنه يوم الطائف قاعداً في حائط أبي يعلى يأكل، فرميته فأصيبت عينه. فأتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، هذه عيني أصيبت في سبيل الله. فقال النبي صلى الله عليه وسلم "إن شئت دعوتُ الله فرُدّت عليك، وإن شئت فالجنة
ஸஈத்பின் உபைத் (ரலி) சொல்கின்றார்கள் (நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே இவர் பிறகு இஸ்லாத்தை ஏற்றார்) தாயிபின் நாளில் நடந்த போரில் நான் அபூ சுப்யானைப் பார்த்தேன் அவர் அபூ யஹ்லா என்பவரின் தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் நான் அம்பு எறிந்தேன். அது அவர் கண்ணில் பட்டு கண் பரிக்கப்பட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நாயகமே இதோ எனது கண் அல்லாஹ்வின் பாதையில் தாக்கப்பட்டது என்று சொன்னார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் கண்ணை நாடினால் நான் துஆ செய்கிறேன் கண் மீண்டும் முன் போன்று உங்களுக்கு கிடைத்து விடும். நீங்கள் நாடினால் இதே நிலையில் பொறுமையை மேற்கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றார்கள்அவர்சொர்க்கம்போதும்என்றுகூறி விட்டார். [நூல் : ஹயாத்து ஸஹாபா]
மவ்த்தை அழைத்து வந்து மூத்தா போர்:
لما اصيب القوم قال رسول الله صلى الله عليه وسلم - فيما بلغني - : " أخذ زيد بن حارثة الراية فقاتل بها حتى قتل شهيداً، ثم أخذها جعفر بن أبي طالب فقاتل حتى قتل شهيداً " . ثم صمت رسول الله صلى الله عليه وسلم حتى تغيّرت وجوه الأنصار، وظنوا أنه قد كان في عبد الله بن رواحة ما يكرهون، فقال: ثم أخذه عبد الله بن رواحة فقاتل حتى قتل شهيداً، ثم لقد رفعوا لي في الجنة " فيما يرى النائم " على سرر من ذهب فرأيت في سرير عبد الله بن رواحة ازوراراً عن سريري صاحبيه، فقلت: عم هذا؟ فقيل لي: مضياً، وتردد عبد الله بعض التردد، ثم مضى فقتل
மூத்தா போரில் சஹாபாக்கள் தாக்கப்பட்ட போது மதீனாவில் இருந்த தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இப்போது ஸைது பின் ஹாரிஸா இஸ்லாமிய கொடியை எடுத்தார் சண்டையிட்டார் அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு ஜஃபர் பின் அபீ தாலிப் கொடியை எடுத்தார் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். இத்துடன் நபி (ஸல்) அவர்கள் மெளனமாகி விட்டார்கள் இதனால் அன்சாரிகளின் முகம் சோகமாக மாறியது 3-ம் தளபதி அப்துல்லாஹ் பின் ரவாஹா விஷயத்தில் வெறுக்கும் படியானஏதேனும் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிடுவார்களோ என்று எண்ணினார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு இப்னு ரவாஹா கொடியை எடுத்து யுத்தம் செய்கிறார் அவரும் கொல்லப்பட்டார் இப்போது அந்த 3 பேரின் புனித ஆன்மாவும் தங்க கட்டிலில் வைத்து சுவனத்தின் பக்கம் எடுத்து செல்லப்படுகிறது அதில் இப்னு ரவாஹா அவர்களின் கட்டிலின் கால் கொஞ்சம் வலைந்திருப்பதை கண்டேன் காரணம் என்னவெனில் ஸைது, ஜஃபர் இருவரும் நான் சொன்னவுடன் தாமதிக்காமல் போருக்கு போனார்கள் ஆனால் இப்னு ரவாஹா அவர்கள் கொஞ்சம் தாமதித்து சென்றார்கள். [நூல் : உஸ்துல்கஃபா ]
நபி (ஸல்) அவர்கள் இவர்கள் மூன்று பேரையும் போருக்கு தளபதிகளாக அனுப்பும் போது இந்த 3 தளபதிகளும் கொல்லப்பட்டால் நான்காவது உங்களில் ஒருவரை தளபதியாக நியமித்து கொள்ளுங்கள் என்று சொன்ன போதே அந்த மூன்று பேருக்கு தெரியும் நமக்கு இந்த போர் தான் கடைசி நாம் இதில் நிச்சயம் கொல்லப்படுவோம் இவ்வாறு உயிர் போகும் என்று தெரிந்தே போனது பெரிய தியாகமாகும்.
【மூன்று நபர்கள் அவர்களின் [நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்தினால் இவ்வுலகில் துன்பம் நீங்கியது. 】
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّي اَوَوْا الْمَبِيْتَ اِلَي غَارٍ فَدَخَلُوْهُ، فَانْحَدَرَتْصَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهَا الْغَارَ، فَقَالُوْا: اِنَّهُ لاَ يُنْجِيْكُمْ مِنْ هذِهِ الصَّخْرَةِ اِلاَّ اَنْ تَدْعُوا اللهَ بِصَالِحِ اَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اَللّهُمَّ! كَانَ لِيْ اَبَوَانِ شَيْخَانِ كَبِيْرَانِ، وَكُنْتُ لاَ اَغْبِقُ قَبْلَهُمَا اَهْلاً وَلاَ مَالاً فَنَأَي بِيْ فِيْ طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ اُرِحْ عَلَيْهِمَا حَتَّي نَامَا فَحَلَبْتُ لَهُمَا غَبُوْقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ، فَكَرِهْتُ اَنْ اَغْبِقَ قَبْلَهُمَا اَهْلاً اَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلي يَدَيَّ اَنْتَظِرُ اِسْتِيْقَاظَهُمَا حَتَّي بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوْقَهُمَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ مِنْ هذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ اْلآخَرُ: اَللّهُمَّ! كَانَتْ لِيْ بِنْتُ عَمٍّ، كَانَتْ اَحَبَّ النَّاسِ اِلَيَّ فَاَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّيْ حَتَّي اَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِيْنَ فَجَاءَتْنِيْ فَاَعْطَيْتُهَا عِشْرِيْنَ وَمِائَةَ دِيْنَارٍ عَلي اَنْ تُخَلِّيَ بَيْنِيْ وَبَيْنَ نَفْسِهَا فَفَعَلَتْ، حَتَّي اِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ: لاَ اُحِلُّ لَكَ اَنْ تَفُضَّ الْخَاتَمَ اِلاَّ بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوْعِ عَلَيْهَا فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ اَحَبُّ النَّاسِ اِلَيَّ فَتَرَكْتُ الذَّهَبَ الَّذِيْ اَعْطَيْتُهَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ اَنَّهُمْ لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ مِنْهَا، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ الثَّالِثُ: اَللّهُمَّ! اِنِّيْ إِسْتَأْجَرْتُ اُجَرَاءَ فَاَعْطَيْتُهُمْ اَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ، تَرَكَ الَّذِيْ لَهُ وَذَهَبَ ، فَثَمَّرْتُ اَجْرَهُ حَتَّي كَثُرَتْ مِنْهُ اْلاَمْوَالُ فَجَاءَنِيْ بَعْدَ حِيْنٍ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! اَدِّ اِلَيَّ اَجْرِيْ، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَي مِنْ أَجْرِكَ مِنَ اْلاِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيْقِ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! لاَ تَسْتَهْزِئئْ بِيْ، فَقُلْتُ: اِنِّيْ لاَ اَسْتَهْزِئئُ بِكَ، فَاَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اَللّهُمَّ! فَاِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوْا يَمْشُوْنَ.
உங்களுக்கு முன் இருந்த ஒரு சமுதாயத்தினரில் மூன்று நபர்கள் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். (இரவு நேரமாகிவிட்டதால்) இரவைக் கழிக்க ஒரு குகையில் நுழைந்தார்கள். அந்த நேரம் மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாயிலை அடைத்து விட்டது. (இதைப்பார்த்த) அவர்கள், எல்லோரும் தத்தமது நற்செயல்கள் மூலம் அல்லாஹுதஆலாவிடம் துஆக் கேட்டுத்தான் இந்தப் பாறையிலிருந்து ஈடேற்றம் பெறமுடியும்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர்கள் தத்தமது நற்செயல்களின் பொருட்டால் துஆச் செய்தார்கள்) அவர்களில் ஒருவர், யா அல்லாஹ்!, (உனக்குத் தெரியும்) எனது பெற்றோர் மிக வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்னதாக எனது மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுக்கமாட்டேன். ஒரு நாள் நான் ஒரு பொருளைத் தேடி வெகுதூரம் சென்று விட்டுத் திரும்பி வந்தபோது பெற்றோர் தூங்கி விட்டிருந்தனர். என்றாலும், நான் அவர்களுக்காக மாலை நேரப் பாலைக் கறந்து (அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றபோது. அவர்கள் (அப்பொழுதும்) உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்கு முன் மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுப்பதையும் விரும்பவில்லை. நான் பால் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தேன். காலைப் பொழுது ஆகிவிட்டது, அவர்கள் விழித்து விட்டார்கள், (நான் அவர்களுக்குப் பாலைக் கொடுத்தேன்) அந்நேரத்தில் அவர்கள் முதல் நாள் மாலை நேரத்துப் பாலைக் குடித்தார்கள். யாஅல்லாஹ்!, உன்னுடைய திருப்பொருத்தத்திற்காக இச்செயலை செய்திருந்தேனென்றால், இப்பொழுது இந்த பாறையின் காரணமாக சிரமத்தில் சிக்கி இருக்கும் எங்களை இதிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்வாயாக!” என்று துஆச் செய்தார். அவருடைய துஆவின் பலனால் அந்தப் பாறை சிறிதளவு விலகியது. ஆனால், வெளியேற முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், இரண்டாம் மனிதர், யாஅல்லாஹ்! என்னுடைய சிறிய தந்தைக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் எனக்கு மிக அன்புக்குரியவளாக இருந்தாள். நான் (ஒருமுறை) அவளுடன் என் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தேன். ஆனால், அவள் அதற்கு இணங்கவில்லை. இந்நிலையில் வறுமையின் காரணமாக அவள் (என்னிடம்) வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவள் என்னைத் தனிமையில் சந்திக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் அவளுக்கு நான் நூற்றி இருபது தங்க நாணயங்களைக் கொடுத்தேன், அவளும் அதற்குச் சம்மதித்துவிட்டாள். இறுதியில் (என் இச்சையைப் பூர்த்தி செய்யச் சரியான சந்தர்ப்பம் பெற்றிருந்த போது) அநியாயமாக இந்த முத்திரையை உடைப்பதை உனக்கு ஆகுமானதாக நான் கருதவில்லை” என்று சொன்னாள். (இதைக்கேட்டதும்) நான் என் தீய எண்ணத்தை விட்டுவிட்டேன், உண்மையில் அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தும், அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த அந்தத் தங்கக் காசுகளையும் விட்டுவிட்டேன். யா அல்லாஹ்! உன்னுடைய பொருத்தத்திற்காக இச்செயலை நான் செய்திருந்தால், எங்களின் இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆ செய்தார், அவ்வாறே பாறை இன்னும் கொஞ்சம் விலகியது, ஆயினும் வெளியே வரமுடியவில்லை. மூன்றாமவர், யா அல்லாஹ்!, நான் கூலியாட்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அனைவருக்கும் நான் கூலியைக் கொடுத்துவிட்டேன். ஒருவர் மட்டும் கூலி வாங்காமல் சென்றுவிட்டார். நான் அவருடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்தேன். இறுதியாக அவர் செல்வம் பெருகிவிட்டது, சிலநாட்கள் கழித்து ஒரு நாள் அவர் வந்தார், வந்தவர், அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குத் தாருங்கள்” என்றார். அதற்கு நான், நீ பார்க்கின்ற இந்த ஒட்டகம், மாடு, ஆடுகள் மற்றும் அடிமைகள் இவையெல்லாம் உம்முடைய கூலிப்பணம் தான்!”. உம்முடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்ததால் இந்த லாபங்கள் கிடைத்துள்ளன” என்றேன். அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்” என்று அவர் கூறினார்”, நான் கேலி செய்யவில்லை” (உண்மையைக் கூறுகிறேன்) என்றேன். (என்னுடைய விளக்கத்திற்குப்) பிறகு அவர் பொருள்கள் அனைத்தையும் கொண்டு சென்று விட்டார், எதையும் விட்டுவைக்கவில்லை. யா அல்லாஹ்!, நான் இந்தச் செயலை உன்னுடைய பொருத்தத்திற்காகவே செய்திருந்தேனென்றால், நாங்கள் சிக்கியுள்ள இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆச் செய்தார். அப்படியே அந்தப் பாறை முழுமையாக விலகியது, (குகையின் வாசல் திறந்து கொண்டது) எல்லோரும் வெளியேறிவிட்டனர்” என்ற ஹதீஸைத் தாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [புஹாரீ 2272]
✍🏻 அன்புள்ளவர்களே! முதலாமவருக்கு தன் நப்ஸ் உனது பெற்றோறை விட உனது மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் முதலி பால் கொடு என்று சொன்னது. அதனை கட்டுப்படுத்தி இரவு முழுவது முழித்து அவர்கள் காலைப் பொழுது விழிக்கும் வரை நான் முழித்திருந்து ,(நான் அவர்களுக்குப் பாலைக் கொடுத்தேன்). இரண்டாமவருக்கு என்னுடைய சிறிய தந்தைக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் எனக்கு மிக அன்புக்குரியவளாக இருந்தாள். நான் (ஒருமுறை) அவளுடன் என் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தேன். அப்போது நப்ஸை கட்டுப்படுத்தியது. முன்றாமவருக்கு ஒருவர் மட்டும் கூலி வாங்காமல் சென்றுவிட்டார். நான் அவருடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்தேன். அனைத்தையும் வைத்துக்கொள்ளுமாறு என் நப்ஸ் சொன்னது நான் அவருக்கு கொடுத்து விட்டேன்.
【[நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்தினால் சுவனம் கிடைக்கும் !! . 】
✍🏻 அன்புள்ளவர்களே! நமது [நஃப்ஸை] ஆன்மாவை இவ்வுலகில் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினால் விலைமதிப்பில்லா சுவனம் கிடைக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: لَمَّا خَلَقَ اللّٰهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلاَّ دَخَلَهَا، ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَدْخُلَهَا أَحَدٌ قَالَ: فَلَمَّا خَلَقَ اللّٰهُ تَعَالَي النَّارَ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ! وَعِزَّتِكَ لاَ يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلَهَا، فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ: يَاجِبْرِيلُ! اِذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ! وَعِزَّتِكَ وَجَلاَلِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لاَ يَبْقَي أَحَدٌ إِلاَّ دَخَلَهَا. رواه ابوداؤد
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ் சொர்க்கத்தைப் படைத்த பின் “சொர்க்கத்தை பார்த்துவாருங்கள்!’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் சொன்னான். அவர்கள் சென்று பார்த்துவிட்டுத் வந்து, “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! இச்சொர்க்கத்தைப் பற்றி யார் கேள்விப்பட்டாலும் இதில் நுழைந்துவிடுவார்’ என்றார்கள், அதை அடைந்து கொள்ள முழு முயற்சி செய்வார், பிறகு அல்லாஹ் அதைச் [நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்துதலின் சிரமங்களைக் கொண்டு மூடினான், [இஸ்லாத்தை , நபிவழியை ஏற்று நடப்பது மனதிற்கு சிரமத்தைத் தரக் கூடிய ஷரீஅத் சட்டங்கள் என்னும் கட்டுப்பாட்டைக் கொண்டு மூடிவிட்டான்.] பிறகு, “ஜிப்ரஈலே! இப்பொழுது சென்று பார்ப்பீராக!’ என்று சொன்னான், அவர்கள் சென்று பார்த்தார்கள், பார்த்தபின், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! அதில் யாரும் நுழையமாட்டார்களோ என பயப்படுகிறேன்’ என்றார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தைப் படைத்தபொழுது ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரயிலே! நரகத்தைப் பார்த்துவாரும்!’’ என்று சொன்னான், பார்த்தபின் அவர்கள், அல்லாஹ் விடம், “எனது இரட்சகனே! உனது கண்ணியத்தின் மீது ஆணை! இதைப் பற்றி எவர் கேள்விப்படுவாரோ அவர் அதில் நுழைவதை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொள்வார், அதைவிட்டும் தப்பிக்க முயற்சி மேற்கொள்வார்’’ என்று சொன்னார்கள். அதன் பிறகு, அல்லாஹ் நரகத்தை மன இச்சைகளால் சூழச் செய்து, “ஜிப்ரஈலே, இப்போது சென்று பாருங்கள்!’’ என்று சொன்னான். அவர்கள் போய்ப் பார்த்தார்கள், திரும்ப வந்து, “எனது இரட்சகா! உனது கண்ணியத்தின் மீது ஆணை! உனது உயர்ந்த அந்தஸ்த்தின் மீது ஆணையாக! “இதில் யாரும் நுழையாமல் தப்ப முடியாது என்று அஞ்சுகிறேன்’ என்றுரைத்தார்கள். [அபுதாவூது 4744]
【[நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்த நோன்பு நோற்ப்போம்!.】
✍🏻 அன்புள்ளவர்களே! நம்முடைய [நஃப்ஸை] ஆன்மாவை கட்டுப்படுத்த மிக முக்கியமான அமல் நோன்பு நோற்ப்பதாகும்.
இறைவன் நப்ஸை (மனோ இச்சையை) படைத்து "நான் யார்" என்று கேட்டான் "நான் நானாக இருக்கிறேன்" "நீ நீயாக இருக்கிறாய்" என்று நப்ஸ் (கர்வத்துடன்) பதிலளித்தது. மீண்டும் அவன் நப்ஸை நோக்கி "நான் யார் என்று கேட்டான்?" நான் நானாக இருக்கிறேன்; நீ நீயாக இருக்கிறாய்" என்றது நப்ஸ். நப்ஸிடம் மீண்டும் அவன் அதே கேள்வியை கேட்டான் முன்பைப் போலவே அது" நான் நானாக இருக்கிறேன்; நீ நீயாக இருக்கிறாய்" என்றது. இறுதியில் பல நாட்கள் நப்ஸை பட்டினியில் வைத்து நான் யார்? என்று கேட்டான் "நீ தான் எனது ரப்பு நான் உனது அடிமை நப்ஸ்" என்று அது பதில் சொன்னது.
عَنْ عَلْقَمَةَ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ "
நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘‘யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். [புகாரி 1905]
قال رسول الله صلّى الله عليه وسلّم: "الصيامُ جُنَّةٌ وحِصْنٌ حصينٌ مِنَ النارِ".
நபியவர்கள் கூறினார்கள்- “நோன்பு (மன இச்சைகளிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்”. ( புஹாரி - 1894, முஸ்லிம் - 1151)
【 பரிசுத்தம் பெற்ற உள்ளத்தின் அடையாளம் 】
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
فقال رجل : وما زكى (2) المرء نفسه يا رسول الله ؟ قال : « يعلم أن الله عز وجل معه حيث كان »
ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் நாயகமே மனிதன் உள்ளத்தை பரிசுத்தப் படுத்துவது என்றால் என்ன? என்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நாம் எங்கு இருந்தாலும் நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று விளங்குவதாகும் என்றார்கள். [நூல் : முஹ்ஜமுஸ்ஸஹாபா]
【 உள்ளத்தின் நோயை போக்கும் மருந்து 】
وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء " . قيل يا رسول الله وما جلاؤها ؟ قال : " كثرة ذكر الموت وتلاوة القرآن "
பெருமானார் சொன்னார்கள் தண்ணீர் பட்டு இரும்பு துருபிடிப்பது போல் உள்ளமும், துரு பிடித்து அழுக்கு படிந்து காணப்படுகிறது. துருவைபோக்கும் வழி அதிகமாக மரணத்தை நினைப்பதும் குர்ஆன் ஓதுவதுமாகும் என்றார்கள் [நூல் : மிஷ்காத்]
عَنْ اَبِيْ ذَرٍّؓ قَالَ: دَخَلْتُ عَلي رَسُوْلِ اللهِ ﷺ فَقُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اَوْصِنِيْ، فَذَكَرَ الْحَدِيْثَ بِطُوْلِهِ اِلي اَنْ قَالَ: عَلَيْكَ بِطُوْلِ الصَّمْتِ فَاِنَّهُ مَطْرَدَةٌ لِّلشَّيْطَانِ وَعَوْنٌ لَكَ عَلي اَمْرِ دِيْنِكَ، قُلْتُ: زِدْنِيْ، قَالَ: اِيَّاكَ وَكَثْرَةَ الضِّحْكِ فَاِنَّهُ يُمِيْتُ الْقَلْبَ وَيَذْهَبُ بِنُوْرِ الْوَجْهِ. رواه البيهقي:
ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ், எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று வினவினேன், மௌனத்தை அதிகமாகக் கடைப்பிடியுங்கள். (தேவையின்றி எதும் பேசவேண்டாம்) இது (மௌனம்) ஷைத்தானை விரட்டும், தீனுடைய காரியங்களில் உமக்கு உதவியாக இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் இன்னும் உபதேசியுங்கள்'' என்றார்கள். அதிகமாகச் சிரிப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏனேனில், இப்பழக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்து, முகத்தின் ஒளியைப் போக்கிவிடுகிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ. رواه الترمذي
ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யாரஸூலல்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன், உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதீ]
வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சனைகள் இழப்புகள் இவற்றுக்கான அடிப்படை காரணம் என்னவெனில் மனிதன் தன்னுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை அறியாமல்
【 உலகப் பற்றின்மை 】
وَاعْلَمْ أَنَّ شَرَفَ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزَّهُ اسْتِغْنَاءُهُ عَنِ النَّاسِ. رواه الطبراني
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, "இறைத்தூதரே! இறைவன் என்னை நேசிக்கிற வகையிலும், மக்களும் என்னை நேசிக்கிற வகையிலும் (நான்செய்வதற்கேற்ற) நல்லறம் ஒன்றை சொல்லுங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபிகளார், "உலகத்தின் மீது பற்று வைக்காதீர். இறைவன் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவான். மக்களிடம் இருக்கின்ற செல்வம், செழிப்பு, வளங்கள் ஆகியவற்றின் மீதும் எந்தப் பற்றும் வைக்காதீர். (அவற்றில் இருந்து உம் முகத்தைத் திருப்பிக் கொள்வீராக) மக்கள் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவார்கள்'' என்று பதில் அளித்தார்கள்.
உலகின் மீது பற்று வைக்காமல் அதில் இருந்து முகத்தைத் திருப்பிக் கொள்கின்றவர் இறைவனிடம் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொள்கின்றார். இறைவனுக்காகத் தம்முடைய நேரம், ஆற்றல், திறமை அனைத்தையும் அர்ப்பணிக்கத் தொடங்கி விடுகின்றார். இறைவனை மையமாகக் கொண்டே அவரது வாழ்வு நகர்கிறது. இறைவன் மீதான அன்பும், மறுமை இன்பங்கள் மீதான ஆசையும் கொண்ட அடியானை இறைவன் நேசிப்பான் என்பது வெளிப்படை.
【சபதம் எடுங்கள்…】
✍🏻 அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் நஃப்ஸை கட்டுப்படுத்தி வாழுவேன் என்று. .. எல்லாம் வல்ல அல்லாஹ் ﷻ அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ) ****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ******* வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
✍🏻✍🏻நன்றியுரை:- تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.
இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-
உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-
உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +919487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான் விவசாயி..
உதவியாசிரியர்:-
உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943.
இக்கட்டுரை வெளி வர மஷ்வரா [அலோசனை] தந்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.
✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுகளுக்கும் & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ். வஸ்ஸலாம். ✍🏻✍🏻
நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ
அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் பொருந்திக் கொண்டும் & நம் அனைவரின் பாவங்களையும் நன்மைகளாக்கியும் & ரஹ்மத்தான அருளையும் அர்ஷூடைய நிழலையும் நிரப்பமாக தந்தருள்வானாக!”” ஆமீன்.
♣ இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வார ஜுமுஆ குறிப்புரையினை PDF-ல் பெற & வாட்சப் குழுவில் இணைய & பயான் குரு(றி)ப்பில் பயன் பெற♣
நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
உங்களுக்கு பிடித்த ஜுமுஆ குறிப்புரையினை PDF-ல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..
https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4/
♣ உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..♣
https://vellimedaikal.wordpress.com/2016/10/02/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை/
♣ இ-மெயில் சேவை உங்களை அன்புடன் வரவேற்கிறது.. ♣
https://vellimedaikal.wordpress.com/2019/01/05/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-3/
✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுகளுக்கும் & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ். வஸ்ஸலாம். ✍🏻✍🏻
நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.
ஆன்மாவை அழகுபடுத்திடுவோமா?.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக